சிம்பாப்வே கிரிக்கெட் அணி சர்வதேச கிரிக்கெட் சபையின் (ஐ.சி.சி) உறுப்பு நாடுகள் பட்டியலிலிருந்து இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளது.
இதனால் சிம்பாப்வே அணியின் சர்வதேச கிரிக்கெட் சபையின் அங்கத்துவம் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளது.
லண்டனில் இடம்பெற்ற ஐ.சி.சி.யின் மாநாட்டின்போது இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பின் மூலம் சிம்பாப்வே அணிக்கான ஐ.சி.சி.யின் நிதியும் இல்லாது போவதுடன், சர்வதேச கிரிக்கெட் நிகழ்வுகளிலும், போட்டிகளிலும் கலந்து கொள்ளும் வாய்ப்பினையும் அந்த அணியும், அதன் பிரதிநிதிகளும் இழந்துள்ளதுள்ளனர்.
சிம்பாப்வே கிரிக்கெட் அணிக்கு அந்நாட்டு அரசாங்கத்தின் தலையீடு இருப்பதை உறுதிப்படுத்த தவறியதற்காக சிம்பாப்வே அணியின் அங்கத்துவம் இவ்வாறு இடைநீக்கம் செய்யும் முடிவினை ஐ.சி.சி எடுத்துள்ளது.(சே)







