விசேட பெருநாள் தொழுகை மட்டக்களப்பு, காத்தான்குடி பதுறிய்யஹ் ஜும்மா பள்ளிவாசலில் நேற்று பலத்த பாதுகாப்பின் மத்தியில் இடம் பெற்றது.

இதன்போது நோன்புப் பெருநாள் விசேட உரையினை மௌலவி கே.ஆர்.எம். ஸஹ்லான் றப்பானி அவர்களும், பெருநாள் தொழுகையினை இமாம் ஏ.சீ.எம். பைஸல் றப்பானி அவர்கள் நடாத்தியிருந்தார்.

இத் தொழுகையில் ஏறாளமான முஸ்லிம்கள் ஈடுபட்டமையுடன், பலத்த இராணுவ பாதுகாப்பின் மத்தியில் பள்ளிவாயல் நிருவாகத்தினரால் அனைவரும் சோதனைக்குட்படுத்தப்பட்ட பின்னரே பள்ளிவாசலுக்குள் அனுமதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மட்டக்களப்பு மாவட்டத்திற்கான பிரதான பொருநாள் தொழுகை காத்தான்குடி கடற்கரையில் வருடாந்தம் இடம் பெற்று வந்த நிலையில் நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரன சூழ்நிலை காரணமாக காத்தான்குடி நகரசபை இவ்வாண்டுக்கான பொருநாள் தொழுகையினை காத்தான்குடி கடற்கரையில் நடாத்துவதற்கு தடை விதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Previous articleபுளியந்தீவு தெற்கில் வாசிப்பு நிலையம் திறப்பு
Next articleமுனைப்பு ஸ்ரீலங்காவினால் தொடரும் வாழ்வாதார உதவிகள்