கல்முனை வடக்கு தமிழ் உப பிரதேச செயலகம் தொடர்பில் பிரதமர் தலைமையில் கலந்துரையாடல் ஒன்று இன்று இடம்பெறவுள்ளது.

கல்முனை வடக்கு தமிழ் உப பிரதேச செயலகம் தொடர்பில் தீர்மானமிக்க கலந்துரையாடல் ஒன்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று இடம்பெறவுள்ளது.

அலரிமாளிகையில் நடைபெறவுள்ள கலந்துரையாடலில் கிழக்கு மாகாணத்தின் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் பங்கேற்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தவிடயம் தொடர்பாக ஏற்கனவே முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமரை நேற்று மாலை சந்தித்து கலந்துரையாடியதை அடுத்து, இன்றையதினம் இந்த சந்திப்பு நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

கல்முனை வடக்கு தமிழ் உப பிரதேச செயலகத்தை தரமுயர்த்துமாறு வலியுறுத்தி அண்மையில் மதத்தலைவர்கள் கல்முனையில் உண்ணாவிரத போராட்டத்தை தொடர்ச்சியாக முன்னெடுத்திருந்தனர்.

இதன்போது இந்த விடயம் தொடர்பாக விரைவில் தீர்வு பெற்றுக்கொடுக்கப்படும் என்று பிரதமர் எழுத்துமூலமாக உறுதியளித்திருந்தபோதும், அதன் பின்னர் எந்தவிதமான தீர்க்கமான முடிவும் எட்டப்பட்டிருக்கவில்லை. (நி)

Previous articleஐ.நா.சிறப்பு அறிக்கையாளர் இன்று இலங்கை வருகை!
Next articleஜனாதிபதியை சந்திக்கின்றனர் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள்!