வவுனியாவில் தர்மலிங்கம் வீதியிலுள்ள சோமசுந்தரப்புலவர் நினைவுச் சிலையடியில் இன்று காலை ஆடிப்பிறப்பு நிகழ்வு இடம்பெற்றது.
நகரசபை கலாசார பேரவையின் ஏற்பாட்டில் தர்மலிங்கம் வீதி, முச்சந்திலுள்ள நவாலியூர் சோமசுந்தரப்புலவரின் நினைவுத்தூபியில் நகரசபை உபபிதா சு.குமாரசுவாமி தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், அன்னாரின் நினைவுத்தூபிக்கு மலர் மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
நினைவுப் பேருரையை தமிழருவி த.சிவகுமாரன் நிகழ்த்தியிருந்தார்.
ஆடிப்பிறப்பிற்கு நாளை விடுதலை பாடலை வவுனியா விபுலானந்தாக் கல்லூரி மாணவர்கள் பாடியிருந்தனர்.
நிகழ்வில் நகரசபை உறுப்பினர்கள், நகரசபை செயலாளர், தமிழ்மணி அகளங்கன், மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர் செ.ஸ்ரீநிவாசன், பிரதேச கலாசார உத்தியோகத்தர் வீ.பிரதீபன், தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் சந்திரகுமார் கண்ணன், செயலாளர் மாணிக்கம் ஜெகன், முச்சக்கர வண்டிகள் உரிமையாளர் சங்கத்தலைவர் ரவி, சமூக ஆர்வலர்கள், ஆசிரியர்கள், பாடசாலை மாணவர்கள் எனப்பலர் கலந்துகொண்டனர். (நி)








