நோன்பு பெருநாளை முன்னிட்டு கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள மஸ்ஜிதுல் பறகாத் பள்ளிவாயல் நிர்வாகம் ஏற்பாடு செய்த திறந்த வெளியிலான பெருநாள் தொழுகையும், குத்பா பேருரையும் பள்ளிவாயல் முற்றத்தில் இன்று காலை இடம் பெற்றது.

பெருநாள் தொழுகையையும், கொத்பா பேருரையையும் மௌலவி ஏ.ஏ.எம்.ஜெமீல் நடாத்தியதுடன், வாழைச்சேனை, பிறைந்துரைச்சேனை, மாவடிச்சேனை, செம்மண்ணோடை, போன்ற கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான ஆண்களும், பெண்களும் தொழுகையில் கலந்து கொண்டனர்.

இதன்போது இனநல்லுறவுக்காக விஷேட பிரார்த்தனையும் இடம்பெற்றதுடன், பின்னர் கலந்து கொண்டவர்கள் முஸாபா செய்து கொண்டனர்.

Previous articleபிக்குமாரும் சிங்கள மக்களும் இணைந்து நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தில் ஆர்ப்பாட்டம்.
Next articleநாட்டுக்காக ஒன்றிணைவோம் மூன்று நாட்களில் 52.4 மில்லின் ரூபாய்கள் செலவு