நாட்டில் உள்ள சில கடற்பிராந்தியங்களில் கடல் கொந்தளிப்பாக காணப்படும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

நாட்டில் உள்ள சில கடற்பிராந்தியங்களில் எதிர்வரும் 20 ஆம் திகதி வரை கடல் கொந்தளிப்பாக காணப்படும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

புத்தளத்தில் இருந்து காலியூடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பிராந்தியங்களில் கடல் கொந்தளிப்பாகக் காணப்படும் என்றும், நாட்டின் மேல், தென்மேல் மற்றும் தென் கடற்பரப்புகளில் நாளைய தினம் வரை காற்றுடன் கூடிய மழையின் நிலைமை மேலும் அதிகரிக்கும் என்றும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.

புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு திசையிலிருந்து வீசக்கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30 தொடக்கம் 40 கிலோ மீற்றர் வரை காணப்படும்.

மன்னாரிலிருந்து கொழும்பு மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக் கூடுவதுடன் அவ்வேளைகளில் கடல் ஓரளவு கொந்தளிப்பாகவும் காணப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60 தொடக்கம் 70 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடுவதுடன் அவ்வேளைகளில் கடல் கொந்தளிப்பாகவும் காணப்படும்.

கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இது தொடர்பில் அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.  (நி)

Previous articleருஹூணு பல்கலையில் மூடப்பட்டிருந்த பீடங்கள் திறப்பு!
Next articleஅபூர்வ சந்திர கிரகணம் இன்று அதிகாலை தென்பட்டது! (காணொளி இணைப்பு))