ருஹூணு பல்கலைக்கழத்தில் மூடப்பட்டிருந்த பீடங்கள் இன்று திறக்கப்படுகின்றன.
ருஹூணு பல்கலைக்கழத்தின் வெல்லமடம வளாகத்தில் தற்காலிகமாக மூடப்பட்ட மூன்று பீடங்களும் இன்றைய தினம் மீண்டும் திறக்கப்படும் என்று பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் சுஜித் அமரசேன தெரிவித்துள்ளார்.
விஞ்ஞானபீடம், முதுகலை சமூத்திரவியல் மற்றும் தொழில்நுட்ப பீடங்கள் என்பன இன்றைய தினம் திறக்கப்படுகின்றன.
கடந்த வாரம் மாணவர்களுக்கும் கல்வி சாரா ஊழியர்களுக்கும் இடையில் ஏற்பட்ட குழப்பத்தை அடுத்து சில பீடங்கள் மூடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. (நி)






