திருக்கேதீஸ்வரத்தில் நிலவும் மத முரண்பாடுகளை தீர்த்து வைப்பதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு தடையாகவுள்ளதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
தமிழர் ஜனநாயக முற்போக்கு கூட்டணியும், தமிழ் தேசிய கூட்டமைப்பும் தமிழ் மக்களின் பொதுவான பிரச்சினையை தீர்த்து வைப்பதில் இரட்டைக்குழல் துப்பாக்கி போன்று செயற்பட வேண்டும் என்று தெரிவித்துள்ள அமைச்சர் மனோ கணேசன், அதற்கு தான் தயாராக உள்ளதாகவும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தயாராக உள்ளனரா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
கிளிநொச்சி வட்டக்கச்சி மகாவித்தியாலத்தில் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், தமிழ் மக்களின் பொதுவான பிரச்சினைக்கு தீர்வு காண தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைந்து செயற்பட ஜனநாய முற்போக்குக் கூட்டணி தயார் என்றும், திருக்கேதீஸ்வரத்தில் கத்தோலிக்க இந்து மக்களுக்குள் இருக்கும் முரண்பாடுகளை தீர்த்து வைப்பதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் தடையாக இருக்கின்றனர் என்றும் குறிப்பிட்டார். (நி)







