மகா சங்கத்தை அவமதித்து தான் எந்த அறிக்கையும் வெளியிடவில்லை
என்று இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கதெரிவித்துள்ளார்.

அதனால் தான் மாக சங்கத்திடம் மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்

“நான் ஒருபோதும் மகா சங்கத்தை அவமதிக்கும் எந்த அறிக்கையும் வெளியிடவில்லை. நான் கூறியது என்னவென்றால், ஒரு சில துறவிகள் மட்டுமே இரத்தத்திற்காக கத்துகிறார்கள், இந்த துறவிகளில் 90 சதவீதம் பேர் தலைமை துறவிகளால் வழி நடத்தப்படுகிறார்கள். எனவே நான் சொன்னது என்னவென்றால், ஒரு சில துறவிகள் தலைமை துறவிகளால் வழிநடத்தல் செய்யப்படுகிறார்கள் என்றுதான்.

எனினும் நான் கூறிய கருத்து திரிபுபடுத்தப்பட்டுள்ளது. எனது அறிக்கையை அதன் உள்ளடக்கத்தை சிதைத்து திரிபுபடுத்தியவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுப்பேன் என்றும் அவர் குறிப்பிட்டார்.(சே)

Previous articleகன்னியாவில் இன்று கவனயீர்ப்பு போராட்டம்!
Next articleத.தே.கூட்டமைப்புடன் இணைந்து செயற்பட தயார்:மனோ (video)