மத்திய தபால் பரிமாற்றகத்தின் ஊழியர்கள் இன்று மாலை 4 மணி முதல் இரண்டு நாள் வேலை நிறுத்தத்தை முன்னெடுக்க முடிவு செய்துள்ளனர்.

இலங்கை அஞ்சல் சேவைகள் சங்கத் தலைவர் ஜகத் மஹிந்த இதனைத் தெரிவித்துள்ளார்.

ஆட்சேர்ப்பு, பதவி உயர்வு மற்றும் வேதன பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு விடயங்களை முன்வைத்து இந்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

தங்களது பிரச்சினைக்கு உரிய தீர்வை அரசாங்கம் வழங்கத் தவறினால், போராட்டத்தை தொடர்ந்தும் நடத்தும் எண்ணத்தில் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். (சே)

Previous articleபாகிஸ்தானில் கன மழை: 23 பேர் உயிரிழப்பு
Next articleமழையுடனான வானிலை தொடரும்