திருகோணமலை கன்னியா பிரச்சினையை தீர்ப்பதற்கு, இந்து கலாசார அமைச்சு தயாராக இருக்கின்றது என்ற விடயத்தை, கட்சிகளின் தலைமைகளுக்கு, கட்சி உறுப்பினர்கள் அறிவிக்க வேண்டும் என, தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள், சமூக மேம்பாடு மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சர் மனோ கணேசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
யாழ்ப்பாணம் இலங்கை வேந்தன் கலைக் கல்லூரியில் இடம்பெற்ற, இந்து கலாசார அமைச்சின் தெய்வீக சேவைத்திட்டம் நிகழ்வில் உரையாற்றும போது இந்தக் கோரிக்கையை விடுத்தார்.(சி)






