மட்டக்களப்பு ஏறாவூரில் ஆறு மாதகால தையல் பயிற்சிநெறியை பூர்த்திசெய்துள்ள யுவதிகளுக்கு
தையல் இயந்திரங்கள் வழங்கிவைக்கப்பட்டன.

மட்டக்களப்பு ஏறாவூர் நகர் பிரதேசத்தில் ஆறு மாதகால தையல் பயிற்சிநெறியை பூர்த்திசெய்துள்ள யுவதிகளுக்கு சான்றிதழ்கள் மற்றும் தையல் இயந்திரங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று நடைபெற்றது.

முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர்அலி இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.

கிராமிய அபிவிருத்திச் சங்கத்தலைவர் எம்.றிக்னாஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஏறாவூர் பிரதேச செயலாளர் வீ.யூசுப், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிராந்திய அமைப்பாளர் எம்.எல்.ஏ.லத்தீப் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

வாழ்வாதார அபிவிருத் திட்டத்தின் கீழ் ஏறாவூர் நகர் பிரதேசத்தில் ஆரம்பிக்கப்பட்ட தையல் பயிற்சி நிலையத்தில் ஆறு மாத கால பயிற்சியை புர்த்தி செய்துள்ள 16 யுவதிகளுக்கு இங்கு சான்றிதழ்கள் மற்றும் தையல் இயந்திரங்களும் வழங்கப்பட்டன. (நி)

 

Previous articleதமிழரின் கோரிக்கை இன துவேச செயல் அல்ல : கோடீஸ்வரன்
Next articleநேபாளத்தை அச்சுறுத்தும் இயற்கை!