முல்லைத்தீவில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் இராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

முல்லைத்தீவு – கேப்பாப்புலவில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் இராணுவ சிப்பாய் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் இராணுவ வீரர்கள் 8 பேர் காயமடைந்துள்ளனர்.

இராணுவ முகாம் அமைந்துள்ள பகுதியின், வீதியின் வளைவு ஒன்றில் வேகக்கட்டுப்பாட்டை இழந்து கெப் ரக வாகனம் விபத்துக்குள்ளானதில் இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளது.

காயமடைந்த இராணுவ வீரர்களில் மூவர் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு, ஏனைய ஐவரும் இராணுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பாக முல்லைத்தீவு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். (நி)

Previous articleஜனாதிபதி ஆணைக்குழுவின் கால எல்லை நீடிப்பு!
Next articleமகிந்தவை சந்தித்த ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதி!