திருகோணமலை சேருவில பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள செல்வநகர் கிராமத்தைச் சேர்ந்த 328 புதிய சமூர்த்தி பயனாளிகளுக்கு சமூர்த்தி உணவு முத்திரை வழங்கும் நிகழ்வு நேற்று செல்வநகர் அந்நூர் வித்தியாலய கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
சமூர்த்தி உணவு முத்திரை வழங்கும் நிகழ்வில், பிரதம அதிதியாக கேகாலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், திருகோணமலை மாவட்ட ஐக்கிய தேசிய கட்சியின் சேருவில தொகுதியின் புதிய அமைப்பாளருமான சந்தித் சமரசிங்க கலந்து கொண்டார்.
அத்துடன், சேருவில பிரதேச சபையின் தவிசாளர் ரணசிங்க பண்டார, சேருவில பிரதே சபையின் ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் ஏ.சீ.எம்.அலி, சமூர்த்தி உத்தியோகத்தர்கள், கிராம உத்தியோகத்தர்கள் உட்பட என பலர் கலந்து கொண்டனர்.
13 வருடங்களுக்கு பின் இக் கிராமத்திற்கு சமூர்த்தி உணவு முத்திரை வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. (நி)








