அரசிடம் சரணாகதியடையாது அபிவிருத்திகளை நாம் பெற்றெடுப்பதே நீண்டகால பயனைக்கொடுக்கும் என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

தமிழர்களாக எங்கள் அரசியல் உரிமைகளுடன், அபிவிருத்தியையும் பெற்றால் மாத்திரமே இலங்கைத்தீவில் ஏனைய இனங்களுடன் இணைந்து வாழ முடியும் என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார்.

தனது அமைச்சின் கீழ், வவுனியா மாவட்டத்தில் உள்ள கிராமங்களுக்கு ஒதுக்கிய நிதியை பகிர்ந்தளிக்கும் நிகழ்வில் பங்குபற்றிய பின்னர் ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு குறிப்பிட்டார்.

அமைச்சர் மனோகணேசன் இன்றையதினம் வவுனியாவில் பல கிராமங்களுக்குச் சென்று மக்கள் சந்திப்புகளை மேற்கொண்டார்.

தமது அமைச்சின் ஊடாக ஒதுக்கப்பட்ட நிதியினை மக்களின் தேவைகளை அறிந்து பகிர்ந்தளிக்கும் முகமாகவே இந்த விஜயம் மேற்கொள்ளப்பட்டது.

குறித்த விஜயத்தின்போது வவுனியா சிவபுரம் , கற்பகபுரம், புதிய கற்பகபுரம், பம்பைமடு, மடுக்குளம், கோவில் மோட்டை, ஆச்சிபுரம், ஆனந்தபுரம், தரணிக்குளம், சிதம்பரபுரம், கற்பகபுரம், மதுராநகர், ரம்பாவெட்டி , புதிய வேலவர் சின்னகுளம் ஆகிய கிராமங்களுக்கு சென்று சந்திப்புக்களை மேற்கொண்டார்.

இந்த சந்த்pப்பில் பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார், தேசிய அமைப்பு செயலாளர் வினாயகமூர்த்தி ஜனகன், வட மாகாண அமைப்பாளர் ஆகிய விமலசந்திரன், ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரச்சார செயலாளர் பரனிதரன், வவுனியா மாவட்ட அமைப்பாளர் நடராஜா, மன்னார் மாவட்ட அமைப்பாளர்கள் தீபன், ஆகியோரும் கலந்து கொண்டனர். (நி)

Previous articleமுஸ்லிம் விவாக சட்டம் திருத்தங்களுடன் விரைவில் பாராளுமன்றில்
Next articleதிருக்கோவில் முன்னாள் பிரதேச செயலருக்கு பிரியாவிடை! (படங்கள் இணைப்பு)