பேஸ்புக் நிறுவனத்திற்கு சுமார் 90 ஆயிரம் கோடி ரூபா அபராதத்தை விதிப்பதற்கு அமெரிக்க கட்டுப்பாட்டாளர்கள் அனுமதியளித்துள்ளனர்.

தனியுரிமை தரவு மீறல் குறித்து குற்றச்சாட்டுக்களின் அடிப்படையிலான விசாரணைகளுக்கு அமைய, இந்த அபராதத்தை விதிக்க அனுமதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

87 மில்லியன் பேஸ்புக் பயனாளிகளின் தரவுகள் முறையற்ற விதத்தில் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில், அமெரிக்க பெடரல் வர்த்தக ஆணைக்குழு குறித்த விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.(சே)

Previous articleஉலகக் கிண்ண வலைபந்தாட்டத்தின் முதல் போட்டியில் இலங்கை தோல்வி
Next articleஅமைச்சர் ஆனால் ரிஷாட் மீது மீண்டும் அவநம்பிக்கைய பிரேரணை-ரத்தன தேரர்