இங்கிலாந்தின் லிவர்பூல் எம். அண்ட் எஸ். பாங்க் எரினா உள்ளக அரங்கில் நேற்று ஆரம்பமான 15ஆவது உலகக் கிண்ண வலைபந்தாட்டப் போட்டியில் ஏ குழுவில் இடம்பெறும் இலங்கை அணி தனது முதல் போட்டியில் ஏகப்பட்ட  தவறுகளுக்கு மத்தியில் ஸிம்பாப்வேயிடம் 30 கோல்கள் வித்தியாசத்தில் படு தோல்வி அடைந்தது.

 

இத் தோல்விக்கு அவ்வப்போது விட்ட தவறுகளே காரணம் என இலங்கை அணித் தலைவி சத்துரங்கி ஜயசூரிய தெரிவித்தார்.

16 நாடுகள் பங்குபற்றும் உலகக் கிண்ண வலைபந்தாட்டத்தின் இப் போட்டியில் ஸிம்பாப்வே 79 க்கு 49 என்ற கோல்கள் அடிப்படையில் வெற்றிபெற்றது. இதே குழுவில் இடம்பெறும் நடப்பு சமபியன் அவுஸ்திரேலியா தனது ஆரம்பப் போட்டியில் 88 க்கு 24 என்ற கோல்கள் அடிப்படையில் வட அயர்லாந்தை மிக இலகுவாக வெற்றிகொண்டது.

தவறுகளுக்கு மத்தியிலும் போட்டியின் முதல் மூன்று ஆட்டநேர பகுதிகளில் ஸிம்பாப்வேக்கு சவால் விடுத்து விளையாடிய இலங்கை, கடைசி ஆட்ட நேரப் பகுத்யில் தடுமாற்றத்துடன் விளையாடி படுதோல்வியைத் தழுவியது.(சே)

Previous articleஹட்டனில் பொலிஸ் அணிவகுப்பு மரியாதை!
Next articleபேஸ்புக் நிறுவனத்திற்கு 90 ஆயிரம் கோடி அபராதம்