யாழ்ப்பாணம் நல்லூர் பிரதேச செயலகத்தின் பண்பாட்டு பெருவிழா நேற்றைய தினம் நடைபெற்றது.

யாழ்ப்பாணம் நல்லூர் பிரதேச செயலகத்தின் பண்பாட்டு பெருவிழா நிகழ்வும், கலைஞர் கௌரவிக்கும் நிகழ்வும் நல்லூர் நல்லை ஆதீனத்தில் நேற்றைய தினம் நடைபெற்றது.

நல்லூர் பிரதேச செயலாளர் அன்ரன் யோகநாயகம் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் யாழ்ப்பாணத்தின் இளம் கலைஞர்கள் மற்றும் முது கலைஞர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

இதன்போது கலைத்துறை, ஊடகத்துறை, இசைத்துறை, நாடகத்துறை ஆகிய துறைகளில் பணியாற்றிவரும் 16 கலைஞர்கள் கலைஞானச்சுடர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

நிகழவில் பிரதம விருந்தினராக வடக்கு மாகாண கல்வி பண்பாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர் எல்.இளங்கோவன் கலந்து கொண்டார். (நி)

Previous articleஜே.வி.பியின் நம்பிக்கையில்லா பிரேரணை அரசை காப்பாற்றும் முயற்சி!
Next articleகம்பஹாவில் முதலாவது தமிழ் இந்து தேசிய பாடசாலை!