மஹியங்கனை பாலத்தின் மேல் இருந்து இளைஞன் ஒருவனும் யுவதி ஒருவரும் மகாவலி ஆற்றில் குதித்துள்ளனர்.
எனினும் ஆற்றில் குதித்த இளைஞன் நீந்தி கரைக்கு வந்ததை அடுத்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதனையடுத்து மஹியங்கனை பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து காணாமல் போன யுவதியை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
காணாமல் போனவர் ரிதீமாலியத்த பிரதேசத்தில் வசிக்கும் 19 வயதுடைய யுவதி என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இவர் நேற்று காலை மேலதிக வகுப்பில் கலந்து கொள்வதாக கூறிவிட்டு வீட்டில் இருந்து வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவத்தை நேரில் பார்த்த நபர் ஒருவர் கூறும் போது, முதலில் யுவதி ஆற்றில் குதித்ததாகவும் பின்னர் இளைஞன் ஆற்றில் குதித்ததாகவும் தெரிவித்தார்.
குறித்த சம்பவம் அங்கிருந்த நபர் ஒருவரின் கைப்பேசியில் இவ்வாறு பதிவு செய்யப்பட்டிருந்தது.

Previous articleமன்னாரில் மக்களின் காணிகளை விடுவிக்க நடவடிக்கை!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here