
கண்டி – நாவலப்பிட்டி பகுதியில் வான் ஒன்றினுள் மர்மமான முறையில் உயிரிழந்த நபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
கண்டி – நாவலப்பிட்டி பகுதியில் வான் ஒன்றினுள் மர்மமான முறையில் உயிரிழந்த நபர் ஒருவரின் சடலம் நேற்று மீட்கப்பட்டுள்ளது.
36 வயதுடைய ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக நாவலப்பிட்டி பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
போதையுடன் உறங்கிய நிலையில் அவர் உயிரிழந்திருக்கலாமென குறிப்பிடப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் நாவலபிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். (நி)










