கொரோனா தடுப்பூசியின் பூஸ்டர் டோஸை பெற்றவர் சில மணி நேரங்களிலேயே உயிரிழந்த சம்பவம் வவுனியாவில் பதிவாகியுள்ளது.
எனினும், குறித்த நபரின் மரணத்திற்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை.
வவுனியா – காத்தார் சின்னக்குளத்தை சேர்ந்த 54 வயது நபரே இவ்வாறு உயிரிழந்தார்.
குறித்த நபர் மகாறம்பைக்குளம் பொது நோக்கு மண்டபத்தில் நேற்று நடத்தப்பட்ட பூஸ்டர் டோஸ் வழங்கும் முகாமில் தடுப்பூசியைப் பெற்றார்.
சுகாதாரப் பிரிவினரின் அறிவுறுத்தலின்படி, தடுப்பூசி பெற்ற பின்னர் சிறிது நேரம் அங்கேயே காத்திருந்து விட்டு சைக்களில் தனது வீட்டுக்கு சென்றுள்ளார்.
வீட்டுக்கு சென்ற அவர் சில மணி நேரத்திலேயே உயிரிழந்தார்.
அவரின் உடலை உறவினர்கள் உடனடியாக வவுனியா மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஏற்கனவே, அவர் சில நோய்களுக்கு உள்ளாகியிருந்தார் என கூறப்படுகின்றது.
அவரின் உடலை பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தவும், பிரேத பரிசோதனைகளை நடத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
வவுனியாவில் பூஸ்டர் டோஸை பெற்றவர் சில மணி நேரங்களில் உயிரிழப்பு!







