12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு கொரோனா வைரஸ் தடுப்பூசி வழங்க சுகாதார அமைச்சு அனுமதி அளித்துள்ளதாக சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் மருத்துவர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
16 வயதுக்கு மேற்பட்ட பாடசாலை மாணவர்கள் அனைவருக்கும் தடுப்பூசியின் இரண்டாவது டோஸை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான வழிகாட்டுதல்கள் கல்வி அமைச்சுக்கு வழங்கப்பட்டுள்ளன.
தடுப்பூசி எப்போது வழங்கப்படும் என்பது தொடர்பில் விரைவில் முடிவு செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி!
