கிளிநொச்சியில், மாண்புடன் கூடிய குடும்பங்களை தலைமை தாங்கும் பெண்கள் எனும் தொனிப்பொருளிலான கருத்தமர்வு, விழுது அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்றது.
இந்நிகழ்வு, சர்வதேச மனித உரிமைகள் தினத்தையொட்டி, கிளிநொச்சி மாவட்ட கூட்டுறவு சபை மண்டபத்தில், விழுதுகள் அமைப்பைச் சேர்ந்த மோகனதாஸ் ஷர்மிளா தலைமையில் நடைபெற்றது.
நிகழ்வில், போதைப்பெருள் மற்றும் சட்டவிரோத மதுபான உற்பத்தி விற்பனை என்பனவற்றினால் ஏற்படும் பாதிப்புக்கள், அதிலிருந்து விடுபடுவதற்கான சமுகத்தின் தேவை தெடர்பிலும், சமுக சேவைகள் மற்றும் பெண் தெழில் முயற்சியாளர்களின் உற்பத்தி பொருடகளை சந்தைப்படுத்தல், சிறுவர் பெண்கள் பாதுகப்பு உள்களிட்ட விடயங்கள் தொடர்பில், கருத்துகள் வழங்கப்பட்டன.
இதன் போது, மாவட்ட மதுவரி அத்தியட்சகர், சமுக சேவைகள் உத்தியோகத்தர் மற்றும் மாவட்ட சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர், விஞ்ஞான தொழில்நுட்ப உத்தியோகத்தர் என பலர், வளவாளர்களாக பங்கேற்று, கருத்துக்களை வழங்கினர்.
கருத்தமர்வில், கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்ட அமரா பெண்கள் சமாசம், மாவட்ட பெண்கள் அமைப்புக்கள், கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களைச் சேர்ந்த விழுது மையத்தின் உத்தியோகத்தர்கள் என பலர் பங்கேற்றனர்.
Home நிழற்படங்கள் மாண்புடன் கூடிய குடும்பங்களை தலைமை தாங்கும் பெண்கள் எனும் தொனிப்பொருள் கருத்தமர்வு!
மாண்புடன் கூடிய குடும்பங்களை தலைமை தாங்கும் பெண்கள் எனும் தொனிப்பொருள் கருத்தமர்வு!






