நுவரெலியா ஹட்டனில் சட்டவிரோதமான முறையில் மாணிக்கல் அகழ்வில் ஈடுபட்ட 07 பேர் பொகவந்தலாவை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஹட்டன் பொகவந்தலாவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொகவந்தலா டின்சின் மேல் பிரிவு பகுதியில் சட்டவிரோதமான முறையில் மாணிக்கல் அகழ்வில் ஈடுபட்ட 07 பேர் இன்று அதிகாலை 03 மணியளவில் கைது செய்யப்பட்டதாக பொகவந்தலாவை பொலிஸார் தெரிவித்தனர்.

நீண்ட காலமாக சுற்றுப்புற சூழலுக்கு தீங்கேற்படும்; வகையில் மிகவும் சூட்சுமமான முறையில் மாணிக்கல் அகழ்வில் ஈடுபடுவதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலினையடுத்தே இந்த சுற்றி வளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சுற்றிவளைப்பின்போது கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து மாணிக்கல் அகழ்வுக்காக பயன்படுத்தப்பட்ட உபகரணங்களும் மீட்கப்பட்டுள்ளன.

சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர்கள் பொகவந்தலா, டின்சின் போன்ற பகுதிகளை சேர்ந்தவர்கள் என்றும், இவர்கள் எதிர்வரும் திங்கட்கிழமை ஹட்டன்; நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர். (நி)

Previous articleவவுனியாவில் காடுகள் அழிக்கப்படுவதாக மக்கள் கவலை! (படங்கள் இணைப்பு)
Next articleதோட்ட நிர்வாகங்கள் அக்கறையின்றி செயற்படுவதாக தோட்ட மக்கள் கவலை!