வவுனியா ஈரற்பெரியகுளம் பகுதியில், தொடருந்து பாதையில் வீழ்ந்து, நபர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டார்.
நேற்று மாலை, கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் காங்கேசன்துறை நோக்கி வருகை தந்த தொடருந்து, வவுனியா ஈரற்பெரியகுளம் பகுதியில் வருகை தந்த வேளை, நபர் ஒருவர், தொடருந்து பாதையில் தலையை வைத்து தற்கொலை செய்து கொண்டார்.
இந்தச் சம்பவத்தில், வவுனியா தவசிகுளம் பகுதியை சேர்ந்த, 55 வயதுடைய கந்தையா ரவி என்ற குடும்பஸ்தரே உயிரிழந்துள்ளார்.
அவரது உடமையில் இருந்து, கடிதம் மீட்கப்பட்டதுடன், குடும்ப விவகாரமே, இந்த தற்கொலைக்கு காரணம் என குறிப்பிட்டுள்ளது.
இந்த நிலையில், சம்பவ இடத்திற்கு சென்ற வவுனியா பொலிசார், விசாரணைகளை முன்னெடுத்தனர்.
தண்டவாளத்தில் தலை வைத்து குடும்பஸ்தர் தற்கொலை!
