நாடு முழுவதும் இன்று முதல் 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு செயலூக்கியாக பைஸர் தடுப்பூசியை வழங்க சுகாதார அமைச்சு கொள்கை தீர்மானம் மேற்கொண்டுள்ளதாக சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
தடுப்பூசி செலுத்தும் வேலைத்திட்டத்தின் நிர்வாகப் பொறுப்பு மாகாணங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதனடிப்படையில், கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதியில் உள்ள 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பைசர் தடுப்பூசியின் பூஸ்டர் டோஸ் செலுத்தும் பணிகள் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
எந்தவொரு கொவிட் தடுப்பூசியினதும் 2 ஆவது டோஸ் தடுப்பூசியை பெற்று 3 மாதங்களை நிறைவு செய்தவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படும்.
கடந்த நவம்பர் 17 ஆம் திகதி முதல் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசியாக பைசர் தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் நாடு முழுவதும் ஆரம்பிக்கப்பட்டு முன்னெடுக்கப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Previous article76 ஆவது வரவு செலவுத்திட்டம் மீதான வாக்கெடுப்பு இன்று
Next articleசொலொஸ்மஸ்தான புனித பூமியின் அபிவிருத்தியை துரிதப்படுத்துமாறு பிரதமர் கோரிக்கை!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here