புத்தளம், உடப்பு பிரதேசத்தில், தமிழ் மக்கள் செறிந்து வாழுகின்ற பிரதேசங்களை இணைத்து, புதிய பிரதேச சபை ஒன்றை அமைத்து தருமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
ஆராய்ச்சிக்கட்டு பிதேச சபைத் தலைவர் தட்சணாமூர்த்தி தலைமையில், உடப்பு பிரதேச சமூக பிரதிநிதிகள், கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை, கொழும்பு மாளிகாவத்தையில் அமைந்துள்ள கடற்றொழில் அமைச்சில், நேற்று சந்தித்து, பல்வேறு விடயங்கள் தொடர்பாகக் கலந்துரையாடியுள்ளனர்.
இதன் போது, உடப்பை சூழவுள்ள பிரதேசத்தில், சுமார் 10 ஆயிரத்திற்கும் அதிகமான தமிழ் மக்கள் வாழ்ந்து வருகின்ற நிலையில், தமிழ் பிரதேச சபை ஒன்றை உருவாக்குவதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு, கோரிக்கை முன்வைத்துள்ளனர்.
அத்துடன், உடப்பு கிராமத்திற்கு அச்சுறுத்தலாக விளங்கும், கடல் அரிப்பை தடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறும், மீனவர் இறங்குதுறை ஒன்றுக்கான தேவை இருப்பதனால், அதனை அமைத்துத் தருமாறும், கோரிக்கை முன்வைத்துள்ளனர்.
இந்த நிலையில், சம்மந்தப்பட்ட தரப்புக்களுடன் கலந்துரையாடி, தமிழ் பிரதேச சபையை உருவாக்குவதற்கான சாத்தியம் தொடர்பில் ஆராய்வதாக குறிப்பிட்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கடலரிப்பு மற்றும் இறங்குதுறை போன்ற விடயங்கள் தொடர்பாக, சம்மந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடி, நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதியளித்துள்ளார்.

Previous articleஅனர்த்த இடைத்தங்கல் முகாம் முகாமைத்துவம் தொடர்பில் செயன்முறை பயிற்சிப் பட்டறை!
Next articleஉயர்நிலைக் கல்வி முறைமையில் சீர்திருத்தங்கள் தேவை: ஜனாதிபதி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here