அவுஸ்ரேலியா அணிக்கு எதிரான முதலாவது ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 147 ஓட்டங்களுக்குள் அனைத்து இலக்ககளையம் இழந்துள்ளது.
அவுஸ்ரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கோண்டுள்ள இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.
அதன் முதல் போட்டி பிரிஸ்பேனில் இன்று ஆரம்பமாகிய நிலையில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
அதன்படி முதல் இன்னிங்ஸிற்காக களமிறங்கிய இங்கிலாந்து அணி அவுஸ்ரேலிய அணியின் வேகப் பந்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் 147 ஓட்டங்களுக்குள் சுருண்டுள்ளது.
அணி சார்பாக ஜோஸ் பட்லர் 39 ஓட்டங்களையும் ஒலி போப் 35 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக்கொடுக்க அணித்தலைவர் உட்பட மூன்று வீரர்கள் ஓட்டமெதனையும் பெறாமல் ஆட்டமிழந்தனர்.
அவுஸ்ரேலிய அணி சார்பாக பந்துவீச்சில் வேகப் பந்துவீச்சாளர் பட் கம்மின்ஸ் 5 விக்கெட்களையும் ஜோஷ் ஹசில்வுட் மற்றும் மிட்செல் ஸ்டார்க் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்களையும் வீழ்த்தினர்.
தற்போது போட்டி மழை காரணமாக தடைப்பட்டிருந்த நிலையில் முதல் நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்துள்ளது.

Previous articleபிரியந்த குமாரவின் கொலை தொடர்பில் மேலும் பலர் கைது!
Next articleவாகன சாரதிகளுக்கு விடுக்கப்பட்ட முக்கிய அறிவிப்பு!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here