மன்னார் மாவட்டத்தில், டெங்கு நோயை கட்டுப்படுத்த, அனைத்து தரப்பினரும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என, மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டிமெல் வலியுறுத்தியுள்ளார்.மன்னார் மாவட்டத்தில், டெங்கு கட்டுப்பாடு தொடர்பாக ஆராயும் அவசர கலந்துரையாடல், இன்று காலை 10.30 மணியளவில், மன்னார் மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்றது.
இதன்போது, சுகாதார துறையினர், பொலிஸ், இராணுவம், பிரதேச செயலாளர்கள், அழைக்கப்பட்ட திணைக்களங்களின் தலைவர்கள் என பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது, டெங்கு நோயை கட்டுப்படுத்துவது தொடர்பில், விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன், கூட்டத்தின் நிறைவில், விடயங்கள் தொடர்பில், அரசாங்க அதிபர் தெளிவுபடுத்தினார்.
மன்னாரில் டெங்கை கட்டுப்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடல்!
