உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்களை ஆராயும் பாராளுமன்ற தெரிவுக்குழுவின் இன்றைய அமர்வு இன்று இடம்பெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்களை ஆராயும் பாராளுமன்ற தெரிவுக்குழுவின் இன்றைய கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அரச புலனாய்வுத்துறை, குற்றப்புலனாய்வுத்துறை, பயங்கரவாத தடுப்பு பிரிவு, பொலிஸ் ஆகியவற்றின் உயரதிகாரிகள் இன்று தெரிவுக்குழு முன்பாக சாட்சியம் அளிப்பர் என அறிவிக்கப்பட்டிருந்து.

இன்று சாட்சியம் வழங்க அறிவித்தல் விடுக்கப்பட்டவர்கள், வேறு சில விடயங்களுக்குச் செல்ல வேண்டிய தேவையுள்ளதாக தெரிவுக்குழுவிற்கு அறிவித்ததன் காரணமாகவே, இன்றைய தெரிவுக்குழு அமர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, தாம் நாடு திரும்பும்வரை அதிகாரிகள் தெரிவுக்குழுவிற்கு செல்லக்கூடாது என பாதுகாப்பு அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி உத்தரவிட்ட காரணத்தால்தான் அதிகாரிகள் இன்று சாட்சியமளிக்க செல்லவில்லை எனவும் சில தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. (நி)

Previous articleசட்டவிரோத மரக்கடத்தலில் ஈடுபட்டோர் கைது!
Next articleபட்டாசுகளால் அதிர்ந்தது கல்முனை!