யாழ்ப்பாணம் – ஈச்சமோட்டை மறவர் குள புனரமைப்பிற்கான அடிக்கல்லினை, யாழ்ப்பாண மாநகர முதல்வர் வி.மணிவண்ணன்,மாநகர பிரதி முதல்வர் து.ஈசன், மாநகர ஆணையாளர் த.ஜெயசீலன் ஆகியோர் நாட்டி வைத்தனர்.
யாழ். மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணனின் ‘தூய நகரம்’ திட்டத்திற்கு அமைவாக தியாகி அறக்கொடை நிறுவனத்தின் வாமதேவன் தியாகேந்திரனின் நிதியுதவியுடன் மறவன்குளம் துரித அபிவிருத்தித் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
அக்குளத்தின் மாதிரி திட்ட வரைபும் மக்கள் பார்வைக்காக வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது. அடிக்கல் நாட்டும் நிகழ்வில் மாநகர சபை உறுப்பினர்கள், மாநகர சபை ஆணையாளர், மாநகர சபை உத்தியோகத்தர்கள், அப்பகுதி மக்கள் என பலர் கலந்துகொண்டனர்.

Previous articleநுவரெலியா – நானுஓயாவில் விபத்து!
Next articleபாதுகாப்பு ஒத்துழைப்பு விரிவாக்கம் தொடர்பில் விசேட கலந்துரையாடல்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here