தற்போதைய அமைச்சரவை மற்றும் இராஜாங்க அமைச்சர்களின் எண்ணிக்கை குறித்த அறிக்கையை இரண்டு வாரங்களுக்குள் சமர்ப்பிக்குமாறு சட்டமா அதிபருக்கு உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
தற்போதைய அமைச்சரவையின் நியமனம் அரசியலமைப்பின் விதிகளை மீறுவதாகக் தெரிவிக்கப்பட்டு, பொறியலாளர் கபில ரேணுகாவினால் அடிப்படை உரிமைகள் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டது.
அம் மனு மீதான பரிசீலனை இன்று உயர் நீதிமன்ற நீதியரசர்கள் விஜித மலல்கொட, யசந்த கோதாகொட மற்றும் மஹிந்த சமயவர்தன ஆகியோர் அடங்கிய மூவரடங்கிய குழாம் முன்னிலையில் இன்று காலை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போதே அமைச்சரவை மற்றும் இராஜாங்க அமைச்சர்களின் எண்ணிக்கை குறித்த அறிக்கையை சமர்ப்பிக்குமாறு சட்டமா அதிபருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. குறித்த மனு மீதான பரிசீலனையினை மீண்டும் 2022 ஜனவரி 27 ஆம் திகதி எடுத்துக் கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டது.

Previous articleநாட்டின் பல பாகங்களிலும் மழை
Next articleநுவரெலியா – நானுஓயாவில் விபத்து!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here