வவுனியா புதூர் புளியங்குளம் பாதுகாப்பற்ற புகையிரதக் கடவையில், நேற்று மாலை இடம்பெற்ற புகையிரத விபத்தில் சிக்கிய இளைஞர் ஒருவர், நேற்று இரவு சிகிச்சைப்பலனின்றி உயிரிழந்துள்ளார்.

புதூர் பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய இலகநாதன் நர்மதன் என்பவரே உயிரிழந்துள்ளார்.

நேற்று மாலை 3.30 மணியளவில், யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற கடுகதி புகையிரதத்தில், புதூர் ஆலயப் பகுதியிலிருந்து பிரதான வீதியைக் கடக்க முற்பட்ட போது, மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞன் மீது புகையிரதம் மோதியுள்ளது.

அதையடுத்து, வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இளைஞன், மேலதிக சிகிச்சைக்காக நேற்று இரவு அனுராதபுரம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

இந்நிலையில், நேற்று இரவு அனுராதபுரம் வைத்தியசாலையில், இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக, உறவினர்கள் குறிப்பிட்டனர்.

இதேவேளை, குறித்த விபத்து இடம்பெற்ற பகுதியில், பாதுகாப்பற்ற புகையிரதக் கடவையை, பாதுகாப்பான கடவையாக அமைத்துத் தருமாறு பலரிடம் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு தீர்வு கிடைக்கவில்லை எனவும், இதுவரை இரண்டு விபத்துக்களில் மூவர் உயிரிழந்துள்ளதாகவும், பொது மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். (சி)

Previous articleகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி மன்னாரில் போராட்டம்
Next articleஅரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தோற்கடிக்கப்பு