ஆட்சிக் கவிழ்ப்பை மேற்கொண்டால், மக்கள் விடுதலை முன்னணியினால் ஆட்சியமைக்க முடியுமா என, பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் கேள்வி எழுப்பியுள்ளார்.
அரசாங்கம் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பான விவாதத்தில், இவ்வாறு கேள்வி எழுப்பினார்.
2015ம் ஆண்டு புதிய அரசாங்கத்தினை உருவாக்கி புதிய பாதையில் பயணித்தோம்.
இதன் போது அவ்வப்போது ஏற்பட்ட இடர்களுக்கு மக்கள் விடுதலை முன்னணி தனது ஆதரவினை வழங்கி, இந்த ஆட்சியை கொண்டு செல்ல ஒத்துழைப்பினை வழங்கியிருந்தது.
குறிப்பாக அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மற்றும் மகிந்த ராஜபக்சவை பிரதமராக்கிய போது, அதற்கு எதிரான ஆதரவு அனைத்தினையும் நீங்கள் வழங்கியிருந்தனர்.
நான் மக்கள் விடுதலை முன்னணியிடம் உங்களிடம் கேட்பது, இந்த அரசாங்கத்தினை ஆட்சியினை கவிழ்த்து, புதிய அரசாங்கம் ஒன்றினை உங்களால் அமைக்க முடியுமா? அதற்கு உங்களுக்கு பலம் இருக்கின்றதா?
அவ்வாறாயின் நீங்கள் பழைய வென்ளை வான் கலாசாரத்தை, ஜனநாயகமற்ற நிலமையை மீண்டும் உருவாக்கும் அரசாங்கம் ஒன்றினை அமைக்கவா முயல்கின்றீர்கள்.
இந்த ஆட்சி கலைந்தால் பொது எதிரணியுடன் இணைந்து அரசாங்கம் உருவாக்க நேரிடும்.
இவ்வளவு காலமும் நீங்கள் பேசிய பேச்சுக்கள் அனைத்திற்கும், தற்போதைய நிலைப்பாட்டிற்கும் வித்தியாசயம் இருக்கிறது ஏன்? என கேள்வி எழுப்பினார். (சி)