மக்கள் விடுதலை முன்னணியினால் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களிக்கபோவதாக பாராளுமன்ற உறுப்பினர் ச. வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சி அலுவலகத்தில் இன்று காலை நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், அரசாங்கம் தமிழ் தலைமைகளை ஏமாற்றவில்லை, தமிழ் தலைமைகள் அரசாங்கத்தை ஏமாற்றவில்லை, இரண்டு பேரும் சேர்ந்து தமிழ் மக்களை ஏமாற்றியிருக்கிறார்கள்.
மேலும், தமிழ் மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றும் விதத்திலே தமிழ் தலைமைகள் நடந்து கொள்ள வேண்டும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் ச. வியாழேந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்நிலையில், இந்த அரசாங்கம் சுமார் நான்கரை வருடங்களாக தமிழர்களின் தலையில் மிளகாய் அரைத்திருப்பதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் ச.வியாழேந்திரன் குறிப்பிட்டுள்ளார். (சே)