அம்பாறை சாய்ந்தமருது அஸ்ரப் லீடர் பாடசாலையில் கல்விகற்கும் மாணவர்கள் 38 பேர் உணவு ஒவ்வாமை காரணமாக மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்கள்.
இன்று நண்பகலிலிருந்து 2.00 மணி வரையும் வைத்தியசாலையில் மாணவர்கள் அனுமதிக்கப்பட்டு வருவதாக மாவட்ட வைத்தியசாலையின்; வைத்திய அதிகாரி ஏ.எல்.எம்.மிஃளார் தெரிவித்தார்.
பாடசாலையில் உள்ள உணவகத்தில் வடை நூடில்ஸ் சம்பல் போன்ற உணவுகளை வாங்கி சாப்பிட்டதாக மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.
சாப்பிட்ட பின் மாணவர்களுக்கு உணவு ஒவ்வாமை காரணமாக வயிற்றுநோவு வயிற்றுவலி சத்தி போன்றவை ஏற்பட்டதாகவும் மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை மாவட்ட வைத்தியசாலையில் 38 மாணவர்கள் அனுமதிக்கப்பட்ட போதிலும் 10 மாணவர்கள் வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சையளிக்கப்பட்டு வீடு திரும்பியுள்ளார்கள் ஏனைய மாணவர்கள் தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்கள். (சி)