கிழக்கு மாகாணத்தில், தமிழ் பாடசாலைகளுக்கு, அதிகளவான முஸ்லிம் ஆசிரிய நியமனங்கள் வழங்கப்பட்டமை தொடர்பில், அரசாங்கம் தீவிர விசாரணை நடத்த வேண்டும் என, பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தன தேரர் தெரிவித்துள்ளார்.
இன்றைய பாராளுமன்ற அமர்வில் இவ்வாறு குறிப்பிட்டார்.
சஹ்ரானின் குண்டுகளை விடவும், ஹிஸ்புல்லாவின் மட்டக்களப்பு ஷர்யா பல்கலைக்கழகமானது மிகவும் பாரதூரமானதாகும்.
அது குறித்த யோசனை ஒன்றை முன்வைத்தால், ஏன் அரசாங்கத்திற்கு அதனை அனுமதிக்க முடியாதுள்ளது?
ஹிஸ்புல்லாவின் மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழகம், ஒட்டுமொத்த தென்னாசிய நாடுகளுக்கும் ஆபத்தான இடமாகும். உலகில் இஸ்லாமிய அடிப்படைவாத தீவிரவாத இயக்கங்கள் 17 இருக்கின்றன.
அதில் தலீபான் ஆயுதக்குழு உட்பட அல்லாஹ் கடவுளின் பெயரைக் கொண்டுதான் தீவிரவாத அமைப்புக்கள் செயற்படுகின்றன.
தலீபான் அமைப்பினர் ஆட்சியை அமைத்தனர், தலீபான், ஜிஹாத் போன்ற பல்வேறு தீவிரவாத அமைப்புக்கள் இந்த உலகில் இஸ்லாமிய அடிப்படைவாதத்தைக் கொண்டு இயங்குகின்றன.
இன்று ஆப்கானிஸ்தானைப் போன்று ஸ்ரீலங்காவின் கிழக்கு மாகாணத்தில் பெண்களுக்கு கல்வி கற்கும் உரிமை தடை செய்யப்பட்டுள்ளது.
யார் அதனை தடை செய்தது? நாங்களா? ஆப்கானிஸ்தானில் பாடசாலைகளுக்கு பெண்கள் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இன்று சிங்கள நபர் ஒருவரை முஸ்லிம் பெண்கள் திருமணம் செய்தால், சுட்டுக் கொலை செய்கின்றனர்.
இதுதான் உண்மை. சுட்டுக் கொலை செய்யாவிட்டால் கடுமையான தண்டனை செய்கிறார்கள்.
கிழக்கு மாகாணத்தில்; பல்வேறு பாடசாலைகளிலும் இன்று பெண்களுக்கு கற்றல் தடை, இசைப் பயிற்சி, நடனக்கலை மற்றும் விளையாட்டுக்களில் ஈடுபடவும் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இவர்கள் அனைவரும் இனவாதச் செயற்பாடுகளையே செய்கின்றனர்.
கிழக்கு மாகாணத்தில் தமிழ்ப் பாடசாலைகளில் அதிகமான முஸ்லிம் ஆசிரியர்களே கடமையாற்றுகின்றனர்.
எவ்வாறு இது நடந்தது?
கிழக்கு மாகாணத்தில் பாடசாலைகளுக்கு பெருந்திரளான முஸ்லிம் நியமனங்கள் வழங்கப்பட்டமை குறித்து அரசாங்கம் உடனடி விசாரணைக்கு விரைய வேண்டும்’
என குறிப்பிட்டுள்ளார்.(சி)






