மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேச செயலகத்தில், ஸ்மார்ட் சிறீலங்கா திட்டத்தின் தொழில் வழிகாட்டல் கருத்தரங்கு நடைபெற்றது.

காத்தான்குடி பிரதேச செயலாளர் யு.உதயசிறீதர் தலைமையில் நடைபெற்ற இந்தக் கருத்தரங்களில் காத்தான்குடி பிரதேச செயலக அலுவலக உத்தியோகத்தர்கள், கிராம உத்தியோகத்தர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், வெளிக்கள உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.

இதன் போது ஸ்மார்ட் சிறீலங்கா திட்டத்தின் அதிகாரி சுரேஸ்குமார் ஸ்மார்ட் சிறீலங்கா திட்டம் பற்றியும் அதன் செயற்பாடுகள் பற்றியும் தெளிவுபடுத்தினாhர்.

அரசாங்கத்தின் ஸ்மார்ட் சிறீலங்கா எனப்படும் இத்திட்டம் நாடு பூராவும் அனைத்து மாவட்டங்களிலும் மேற் கொள்ளப்பட்டு வருகின்றது.

இந்த திட்டத்தின் அலுவலகம் மட்டக்களப்பு மாவட்டத்திலும் திறக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.(சி)

Previous articleமட்டு. மண்முனை மேற்கு பிரதேசத்தில், பிரதேச மட்ட இலக்கிய போட்டிகள்
Next articleவறியவர்களுக்கு வீடு இல்லையா : சுண்ணாகம் மக்கள் போராட்டம்