நுவரெலியா தலவாக்கலை லிந்துளை நகர சபைக்குட்பட்ட, தலவாக்கலை நகரத்தில் உள்ள வர்த்தக நிலையங்கள் மற்றும் உணவகங்கள் அனைத்தும், இன்று சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

இந்த சோதனை நடவடிக்கையை, தலவாக்கலை மற்றும் கொட்டகலை பகுதிகளை சேர்ந்த பொதுச் சுகாதார பரிசோதகர்கள் முன்னெடுத்தனர்.

இதன் போது, ஒரு சில வர்த்தக நிலையங்களில், மனித பாவனைக்கு பயன்படுத்த முடியாத, பிஸ்கட் வகைகள், தேங்காய் எண்ணெய் போன்றன மீட்கப்பட்டு, வழக்குத் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தலவாக்கலை நகரில் உள்ள உணவகங்களை, பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சோதனையிட்ட போது, கோழி இறைச்சி மற்றும் மீன் என்பவற்றை பொரிப்பதற்கு, புதிய சுத்தமான தேங்காய் எண்ணெய்யை பயன்படுத்துமாறும், முதல் நாள் பயன்படுத்திய எண்ணெய்யை, மறுநாள் பயன்படுத்த வேண்டாம் எனவும், உணவக உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன், சமைத்த உணவுகளை, கடதாசிகளை கொண்டு மூடி வைக்க வேண்டாம் எனவும், முடிந்த அளவு கண்ணாடி கொண்ட அலுமாரிகளை பயன்படுத்துமாறும், பாத்திரங்களை மணம் ஏற்படாத வகையில் பேண வேண்டும் எனவும், அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, மீட்கப்பட்ட ஒரு தொகைப் பொருட்கள், நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படவுள்ளதுடன், ஏனைய பொருட்கள், மண்ணெண்ணெய் ஊற்றி அழிக்கப்பட்டுள்ளது. (சி)

Previous articleபோதைப்பொருள் பொதியை வீதியில் வீசிச் சென்றவர் கைது
Next articleமட்டு. மண்முனை மேற்கு பிரதேசத்தில், பிரதேச மட்ட இலக்கிய போட்டிகள்