மன்னார் – பேசாலை கடற்கரையில் தற்காலிக கொட்டிலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கண்ணாடி இழைப்படகு கொட்டிலுடன் தீ வைத்து ஏரியூட்டப்பட்ட சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.

கடந்த மூன்று மாதங்களாக பேசாலை 7 ஆம் வட்டார பகுதியைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் பேசாலை கடற்கரையில் படகை நிறுத்தி கடற்தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளார்.

நேற்று ஒரு தொகுதி வலைகளுடன் குறித்த கண்ணாடி இழைப்படகு, கடற்கரையில் உள்ள தற்காலிக கொட்டிலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் நேற்றிரவு குறித்த கொட்டில் மற்றும் கண்ணாடி இழைபடகு என்பன திடீர் என தீப்பற்றி எரிந்துள்ளது. தீப்பற்றியதை கண்டவர்கள் தீயை அணைக்க முற்பட்டபோதும் படகு முற்றாக எரிந்துள்ளது.

இந்நிலையில் குறித்த படகின் உரிமையாளர் நேற்றிரவு பேசாலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

படகு எரியூட்டப்பட்ட சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பேசாலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். (நி)

 

Previous articleபுதிய வாசகர் வட்டம் அங்குராப்பணம்!
Next articleமட்டக்களப்பில் பிரபல உணவகம் ஒன்றில் தீ! (காணொளி இணைப்பு)