இனவாதத்தினூடாக எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற எதிரணியினர் முயற்சித்து வருவதாக பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் குற்றம் சுமத்தியுள்ளார்.

இனவாதத்தினூடாக எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற முயற்சித்து வரும் எதிரணியினர், ஐக்கிய தேசியக்கட்சி உறுப்பினர்களை இனவாதிகளாக காட்டி சிறுப்பான்மையினரின் வாக்குகளை பெற்றுக்கொள்ள முடியும் என எதிர்பார்ப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் குற்றம் சாட்டியுள்ளார்.

அலரிமாளிகையில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை கூறினார்.

மேலும் மட்டக்களப்பு ஷரியா பல்கலைக்கழகம் தொடர்பாக முன்வைக்கப்படும் குற்றசாட்டுக்கள் மற்றும் தற்போது எழுந்துள்ள சகல பிரச்சினைகளுக்குமான அடித்தளத்தை கடந்த மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கமே உருவாக்கியது எனவும் மரிக்கார் தெரிவித்தார்.

2015 ஆம் ஆண்டு நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்குவதாக கூறி ஆட்சிக்கு வந்தவர்கள் இன்று அந்த திருத்தம் தேவையற்றது என தெரிவித்தது வருகின்றனார்கள்.

நாட்டில் மீண்டும் சர்வாதிகாரம் தலைத்தூக்கும்போதே இந்த அரசியலமைப்புத் திருத்தத்தின் அருமை தெரியவரும் என அவர் சுட்டிக்காட்டினார். (நி)

Previous articleருஹுணு பல்கலையின் கல்விசாரா ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு!
Next articleஅம்பாறையில் மழை:மக்கள் மகிழ்ச்சி! (காணொளி இணைப்பு)