ருஹுணு பல்கலைக்கழகத்தின் கல்விசாரா ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
ருஹுணு பல்கலைக்கழக நிர்வாகக் கட்டடத்தை மறித்து நின்ற மாணவர்கள் சிலர் கல்விசாரா ஊழியர்கள் மீது மேற்கொண்ட தாக்குதலுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, ருஹுணு பல்கலைக்கழகத்தின் கல்விசாரா ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், இந்த விடயம் தொடர்பாக இன்று பீடாதிபதிகளுடன் கலந்துரையாடி பல்கலைக்கழகத்தை தற்காலிகமாக மூடுவதா? இல்லையா என்பது குறித்து தீர்மானிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, நேற்று இடம்பெற்ற மாணவர்களின் தாக்குதலின்போது காயமடைந்த பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் மூவர் மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தொழிற்சங்கம் குறிப்பிட்டுள்ளது. (நி)







