மட்டக்களப்பு ஏறாவூர் பகுதியில் உள்ள வீட்டின் நீர்த்தாங்கியில் இருந்து கைக்குண்டுகள் மற்றும் துப்பாக்கி தோட்டாக்கள் மீட்கப்பட்டன.

இன்று பகல் கிடைத்த தகவலுக்கமைய அங்கு சென்ற விசேட அதிரடிப்படையினரால் சோதனை செய்யப்பட்டு இவைகள் மீட்கப்பட்டுள்ளன.

விசேட அதிரடிப்படையினர், இரானுவத்தினர் மற்றும் பொலிசார் இணைந்து இந்த சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டு ஆயுதங்களை கைப்பற்றியுள்ளனர்.

கூரையின் நீர்த்தாங்கியில் இருந்து கைக்குண்டுகள் இரண்டும் ரீ56 ரக துப்பாக்கிக்கான 63 தோட்டாக்களும் மீட்கப்பட்டன.

மீட்கப்பட்ட கைக்குண்டு ஏறாவூர் புன்னக்குடா பகுதியில் விசேட அதிரடிப்படையினரால் செயலிழக்க செய்யப்பட்டது.

இது தொடர்பாக ஏறாவூர் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். (சி)

Previous articleஅம்பாறை மாவட்ட கடல் கொந்தளிப்பு
Next articleகலை மன்றங்களின் செயற்பாடு தொடர்பில் மட்டு. காத்தாகுடியில் கலந்துரையாடல்