மட்டக்களப்பு காத்தான்;குடி பிரதேச செயலக பிரிவில், கிராமங்கள் தோறும் டெங்கு விழிப்புணர்வுக் குழுக்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

அம்கோர் நிறுவனத்தின் ஏற்பாட்டில் இந்த டெங்கு விழிப்புணர்வுக் குழுக்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

இதன் ஒரு கட்டமாக காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள ஆறு கிராம உத்தியோகத்தர் பிரிவுகளை உள்ளடக்கிய டெங்கு விழிப்புணர்வுக் குழுக்களை அமைக்கும் கூட்டம், இன்று காத்தான்குடி ஐந்தாம் குறிச்சியில் நடைபெற்றது.

இதில் கிராம உத்தியோகத்தர்களான முகம்மட் புவாட், முக்கமட் தஸ்லீம், அப்ஷதுர் ரஸாக், நஸீமா, பஜ்ரியா அம்கோர் நிறுவனத்தின் அதிகாரி எம்.தர்சன் சமூக மேம்பாட்டுக்கான மக்கள் ஒன்றிய தலைவர் உட்பட பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் பொது மக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

இதன் போது ஒரு கிராம உத்தியோகத்தர் பிரிவுக்கு 10 பேர் வீதம் டெங்கு விழிப்புணர்வுக் குழுக்கள் அமைக்கப்பட்டன.
இந்த விழிப்புணர்வுக்குழுக்கள் கிராமத்தில் டெங்கு விழிப்புணர்வு நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக, அம்கோர் நிறுவன அதிகாரி எம்.தர்சன் தெரிவித்தார். (சி)

Previous articleரணில் அமெரிக்காவுக்காக செயற்படுகிறார் : தயாசிறி
Next articleஅட்டாளைச்சேனையில் புலமைப்பரிசில் திட்டத்திற்கான மாணவர்களை தேர்ந்தெடுக்கும் நேர்முகத்தேர்வு