நுவரெலியா கொட்டகலை பிரதேச சபையின் மாதாந்த அமர்வு, இன்று சபை தலைவர் ராஜமணி பிரசாத் தலைமையில் இடம்பெற்றது.

தோட்ட தொழிலாளர்களுக்கு வரவு செலவு திட்டத்தின் மூலம் வழங்குவதற்கு உறுதி தெரிவிக்கப்பட்ட 50 ரூபா கொடுப்பனவை வழங்க வலியுறுத்தி, கொட்டகலை பிரதேச சபை தலைவர் மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உறுப்பினர்கள் கறுப்பு பட்டி அணிந்து சபை அமர்வில் கலந்துகொண்டனர்.

மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு தமிழ் முற்போக்கு கூட்டணியால் மானிய அடிப்படையில் நாள் ஒன்றுக்கு 50ருபா பெற்றுக் கொடுக்கப்படுவதாக கூறப்பட்ட 50 ரூபா கொடுப்பனவினை, காலம் தாத்தாது உடனடியாக பெற்று கொடுப்பதற்கு அரசாங்கத்தில் அங்கம் வைக்கின்ற அமைச்சர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கறுப்பு பட்டி அணிந்து சபைக்குள் பிரவேசித்ததாக பிரதேச சபையின் தலைவர் குறிப்பிட்டார்.

தோட்ட தொழிலாளர்களுக்கு எமது தலைவரினால் பெற்று கொடுக்கபட்ட சம்பளம் போதாது என கூறி, நாள் ஒன்றுக்கு 50 ரூபாவினை பெற்றுத்தருவதாக கூறியவர்கள் இதுவரையிலும் பெற்றுக் கொடுக்கவில்லை எனவும், வாக்குறுதி வழங்கியவாறு 50 ரூபாவினை பெற்றுக் கொடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

தோட்ட தொழிலாளர்களின் சம்பள விடயம் தொடர்பில் சபையில் கலந்துரையாடப்பட்டதில் சபையில் வாக்குவாதம் ஏற்பட்டது.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆயிரம் ரூபா கோரிக்கையை முன்வைத்தது உண்மை. ஆனால் இறுதியில் 750ரூபாவினை பெற்று கொடுத்துள்ள தாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உறுப்பினர்கள் தெரிவித்தனர.;
தமது தலைவர் கூறிய படி வெகுவிரைவில் 50 ரூபவினை அமைச்சர் திகம்பரம் பெற்று கொடுப்பார் என தமிழ் முற்போக்கு கூட்டணி யின் உறுப்பினர்கள் தெரிவித்தனர். (சி)

Previous articleவீதியில் இருந்து வயலுக்குள் பாய்ந்த பஸ்
Next articleஅதிகாரிகளின் கவனக் குறைவால் வீணான குடிநீர்!