அம்பாறை பொத்துவில் பொலிஸ்ப் பிரிவுக்குட்பட்ட றொட்டை வயல் பிரதேசத்தில் பொத்துவில் டிப்போக்கு சொந்தமான இ.போ.ச பயணிகள் பஸ் ஒன்று வீதியை விட்டு விலகி வயல் பிரதேசத்தில் விபத்துக்குள்ளாகி உள்ளது.

இவ் இ.போ.ச பஸ்ஸானது கதிர்காமத்தில் இருந்து பயணிகளை ஏற்றுக் கொண்டு நேற்று  (08) இரவு அக்கரைப்பற்று நகருக்குச் சென்று பயணிகளை இறக்கிவிட்டு மீண்டும் இன்று  (09) அதிகாலை 5.30 மணியளவில் பொத்துவில் நகரை நோக்கி பயணித்துக் கொண்டு இருந்த வேளை குறித்த பஸ் வீதியை விட்டு விலகி வயலுக்கு பாய்ந்து விபத்து ஏற்பட்டு உள்ளதாக சம்பவத்தை பார்த்தவர்கள் தெரிவித்து இருந்தனர்.

இவ் விபத்து இடம்பெற்ற வேளை பஸ்ஸில் ஒருசில பயணிகள் இருந்துள்ளதுடன் சாரதிக்கு காலில் காயம் ஏற்றுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் பஸ்ஸின் சாரதியின் பக்கம்  சேதடைந்துள்ளதையும் அவதானிக்க கூடியதாக இருந்தன.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொத்துவில் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.(சி)

 

Previous articleஇனரீதியிலான பிரச்சினைகளுக்கு ஒழுக்கமற்ற மதத் தலைவர்களே காரணம்
Next article50 ரூபாய்க்காக, நுவரெலியா கொட்டகலை பிரதேச சபை அமர்வு