அமெரிக்காவுடன் செய்யும் ஒப்பந்தங்களை மறைப்பதற்கு, அமைச்சர்கள் முயற்சி செய்கின்றனர் எனவும், நாட்டின் இறையாண்மையை கேள்விக்குறியாக்கும் உடன்படிக்கைகளில் கைச்சாத்திட அரசாங்கம் எத்தணிக்கின்றது எனவும், தேசிய சுதந்திர முன்னணியின் பேச்சாளர் மொஹமட் முசம்மில் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு குறிப்பிட்டார்.
மிகப்பயங்கரமான நாட்டின் இறையாண்மைக்கு விரோதமான உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதற்கான பேச்சுக்களை ஒருபுறம் நடாத்திக்கொண்டு இருக்க, அதனை மறைப்பதற்காக அமைச்சர்கள் முயன்று வருகின்றார்கள்,இதனை வெளிப்படுத்தாது மூடுவதற்கு முயல்கின்றார்கள்.
சபைத் தலைவர் லக்ஸ்மன் கிரியல்ல இது தொடர்பான கேள்விகளுக்கு பதில் வழங்காது விலக்கில் செல்கின்றார், இவை இந்த அரசாங்கத்தின் சுபாபமாக இருக்கின்றது.
இவ்வாறு செய்து இந்த உடன்படிக்கையை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கையில் அரசாங்கம் ஈடுபட்டு வருகின்றது.
அமெரிக்க தூதுவர் சொல்கின்றார் இவ்வாறான உடன்படிக்கையில் கைச்சாத்திடவில்லை என்று.
அதேபோன்று அரசாங்கத்தின் பக்கத்திலும் ஹர்ச டி சில்வா போன்ற சில அமைச்சர்கள் அவ்வாறு ஒப்பந்தங்களில் கையெழுத்திடப் போவதில்லை என்று கூறுகின்றார்கள்.
இவ்வாறு இவர்கள் இல்லை இல்லை என்று கூறிக்கொண்டு, மறைமுகமாக இதனை நிறைவேற்றுவதுதான் இவர்களின் நோக்கமாக இருக்கின்றது.
உடன்படிக்கைக்கான வேலைகள் நடைபெறுகின்றன, மூன்று உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதற்கான பேச்சுவார்த்தைகள் சரிவர நடைபெற்று வருகின்றன.
அவ்வாறு ஒன்றும் நடைபெறாதவாறு மக்களுக்கு காட்டிக்கொள்ளவே அமெரிக்க தூதுவரும் அரசாங்கமும் முயல்கின்றது. என குறிப்பிட்டுள்ளார். (சி)






