பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் மூலம், நாட்டின் இனப்பிரச்சினைக்கு ஒரு தீர்வு கிடைப்பதற்கு வாய்ப்பு கிடைப்பது போல் தோன்றுகின்றது என, வடக்கு மாகாண சபை அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.
இன்று, யாழ்ப்பாணத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு குறிப்பிட்டார்.
வடக்கு கிழக்கில் உள்ள சிரேஸ்ட கட்சி என்றால், அது தமிழரசுக் கட்சி. நாம் யாரையும் புறம் தள்ளி அரசியல் செய்ய வேண்டிய அவசியம் இல்லை.
எமது கட்சியில் யாரும் இணைந்து கொள்வதில் எமக்கு ஆட்சேபனை கிடையாது. எங்களுக்குள்ளே உள்ள
தலைமைத்துவ வித்துவ காய்ச்சல், ஒரு கூட்டணி அமைவதற்கு சாத்தியத்தை உருவாக்காது.
முஸ்லிம் தலைமைத்துவங்கள் போல எமது தலைமைத்துவங்களிடையே ஒற்றுமை இல்லை, நான்தான் தலைவன் என்ற எண்ணம்தான்எமது தலைமைகளிடம் உள்ளது.
ஞானசாரரின் கருத்தை நாம் மறுதலிக்க வேண்டிய அலசியம் இல்லை, எங்களை பொறுத்த வரையில்எமக்கு வடக்கு கிழக்கு இணைந்த தாயகத்தை அவர் நினைத்தால் பெற்றுத்தரலாம்.
தெற்கை நாம் சிங்கள தேசம் என்றுதான் குறிப்பிட்டு வருகிறோம். அது அப்படி இருந்தாலும் எமக்கு பிரச்சினை இல்லை.
ஞானசார தேரர் மூலம், இப்போது நாட்டின் இனப்பிரச்சினைக்கு ஒரு தீர்வு கிடைப்பதற்கு வாய்ப்பு கிடைப்பது போல் தோன்றுகின்றது.
எமது தாயகத்தை விட்டு விட்டு, ஏனைய பகுதிகஐளு சிங்களதேசமாக அக்குவது தொடர்பில் எமக்கு ஆட்சேபனை இல்லை. என குறிப்பிட்டார். (சி)





