மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேச செயலகத்தில் இன்று பாடசாலை மாணவர்களுக்கான இலக்கியப் போட்டிகள் நடைபெற்றன.

கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் மக்களிடையே இலக்கியங்கள் மற்றும் கலாசாரத்தின் மீது விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்தப் போட்டிகள் நடாத்தப்பட்டு வருகின்றன.

இந்த திட்டத்தின் கீழ் காத்தான்குடி பிரதேச செயலாளர் யு.உதய சிறீதரின் ஆலோசனையிலும் வழிகாட்டலிலும் கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.சி.எம்.றிஸ்வானின் நெறிப்படுத்தலில் காத்தான்குடி பிரதேச செயலகத்தில் இப் போட்டிகள் நடைபெற்றன.

காத்தான்குடி கல்விக் கோட்டத்திலுள்ள நான்கு பாடசாலைகளைச் சேர்ந்த 250 மாணவர்கள் இப் போட்டி நிகழ்ச்சியில் பங்கு பற்றியதுடன் கட்டுரை, கவிதை பாடல், எழுத்துப் பிரதி பண்ணுதல் போன்ற போட்டிகள் நடைபெற்றன. (சி

Previous articleவவுனியாவில் சுற்றுலாப் பேருந்து விபத்து!
Next articleஇலஞ்ச குற்றச்சாட்டு தொடர்பில் குற்றப்பத்திரிக்கை கையளிப்பு