யாழ்ப்பாணம் மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டுவரம் ஸ்மார்ட் கம்பங்கள் நிறுவும் பணியை எதிர்வரும் 10 நாட்களுக்கு இடைநிறுத்தி வைக்குமாறு வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் உத்தரவிட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதியில் நிறுவப்படும் ஸ்மார்ட் கம்பம் மற்றும் ஏனை பிரதேசங்களில் நிறுவப்பட்டுள்ள ஸ்மார்ட் கம்பங்களின் மூலம் 5ஜி அலைக்கற்றை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் இது மனிதனுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என தெரிவித்து, வடக்கு மாகாண ஆளுநரிடம் அப்பகுதி மக்கள் முறைப்பாடு செய்திருந்தனர்.

இந்நிலையில், மக்களின் முறைப்பாட்டினை ஆராய்ந்த வடக்கு மாகாண ஆளுநர் குறித்த ஸ்மார்ட் கம்பங்கள் நிறுவும் பணிகளை எதிர்வரும் 10 நாட்களுக்கு தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு யாழ்.மாநகர சபையின் பொறியியலாளர் மற்றும் உத்தியோகத்தர்களுக்கு உத்தவிட்டுள்ளார். (சி)

Previous articleரொய்ஸ் பெர்னாண்டோவிற்கு விளக்கமறியல்
Next articleவவுனியாவில் சுற்றுலாப் பேருந்து விபத்து!